Category Archives: News

தில்ஷானின் அதிரடியால் 332 ஓட்டங்களை குவித்தது இலங்கை


உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் 18ஆவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 50 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட்டை மாத்திரம் இழந்து 332 ஓட்டங்களை குவித்துள்ளது.
பங்களாதேஷூக்கு எதிராக மெல்போர்னில் தற்போது நடைபெற்றுவரும் போட்டியிலேயே இலங்கை அணி 332 ஓட்டங்களை குவித்துள்ளது.
நாணய சுழற்சியிவ்  வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
136 பந்துகளுக்கு முகங்கொடுத்து அதிரடியாக ஆடிய தில்ஷான், 22 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 161 ஓட்டங்களை விளாசினார்.
குமார் சங்கக்காரவும் தனது பங்குக்கு 76 பந்துகளை எதிர்கொண்டு 13 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 105 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
போட்டியில் வெற்றி பெற பங்களாதேஷ் அணி 333 ஓட்டங்களை பெறவேண்டும்

 

ஸ்கொட்லாந்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றி


உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் 17ஆவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்கொட்லாந்து அணியை தோற்கடித்துள்ளது. 

டுனேட்டில் இன்று வியாழக்கிழமை (26) ஆரம்பமான 17ஆவது போட்டியில் ஆப்கானிஸ்தான் – ஸ்கொட்லாந்து அணிகள் மோதின. 

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.   

இதனையடுத்து முதலில் களமிறங்கிய ஸ்கொட்லாந்து 50 ஒவரில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 210 ஓட்டங்களை பெற்றது.   

211 ஓட்டங்களை வெற்றி இலக்காக துரத்திய ஆப்கானிஸ்தான் அணி 49.3 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 211 ஓட்டங்களை பெற்று 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

 

நியூ அணித்தலைவரை கட்டுப்படுத்த தாங்கள் தயார்: அவுஸ்திரேலியா பந்து வீச்சாளர் ஜோஸ்


நியூசிலாந்து, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் நாளை(27) நடைபெறவுள்ள உலகக்கிண்ண குழு நிலைப் போட்டியில் நியூசிலாந்து அணித்தலைவரை கட்டுப்படுத்த தாங்கள் தயராக இருப்பதாக அவுஸ்திரேலியா அணியின் பந்துவீச்சாளர் ஜோஸ் கஸல்வூட் தெரிவித்துள்ளார். 
அவர் ஒரு  சிறந்த துடுப்பாட்ட வீரர். நல்ல போர்மில் உள்ளார். அவரை கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிடால்  ஓட்டங்களை அவர் குவிப்பார். எமது சிரேஸ்ட வீரர்கள் பலர் அவர் துடுப்பாடும் விதங்களை ஐ.பி.எல் போட்டிகளில் நேரடியாக பார்த்துள்ளனர். எமது அணிக்கூட்டங்களின் போது அவற்றை நாங்கள் கலந்துரையாடி தயார்ப்படுத்தல்களை செய்து வருகின்றோம். 24 வயதான ஜோஸ் கஸல்வூட் இன்றைய பயிற்சியின் பின்னர் இந்தக் கருத்துகளை கூறியுள்ளார். 
ஆரோன் பிஞ்ச், டேவிட் வோர்னர் போன்றவர்களுக்கு பந்து வீசி பயிற்சிகளை செய்துள்ளோம். மக்கலம் போன்று அடித்தாடும் இவர்களுக்கு பந்துவீசி பயிற்சிகளை மேற்கொள்ளவது நல்ல பயிற்சிகளை தமக்கு வழங்குவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். 
அவுஸ்திரேலியா அணியில் டேவிட் வோர்னர், ஆரோன் பிஞ்ச், கிளன் மக்ஸ்வெல் போன்ற அதிரடி வீரர்களும், நியூசிலாந்து அணியில் பிரன்டன் மக்கலம், மார்டின் கப்டில், கூரே அன்டர்சன் போன்ற வேகமாக அடித்தாடும் வீரர்களும் உள்ளனர். 
இதன் காரணமாக நாளைய போட்டியில் அதிக ஓட்டங்கள் குவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  அத்துடன் குழு A இல் இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணியே முதலிடத்தை பெறும் என்ற எதிர்பார்ப்புக்களும் உள்ளன.

 

அரபு எமிரேட்ஸை வீழ்த்தி அசத்திய அயர்லாந்து


11ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் 16ஆவது போட்டியில் அயர்லாந்து அணி, 2 விக்கெட்டுக்களால்  ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை தோற்கடித்துள்ளது. 

பிரிஸ்பேனில் இன்று புதன்கிழமை(25) ஆரம்பமான 16ஆவது போட்டியில் அயர்லாந்து – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. 

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.  

இதனையடுத்து, முதலில் களமிறங்கிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ், 50 ஒவரில், 9 விக்கெட்டுகளை இழந்து 278 ஓட்டங்களை பெற்றது.  

279 ஓட்டங்களை வெற்றி இலக்காக துரத்திய அயர்லாந்து அணி, 49.2 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 279 ஓட்டங்களை பெற்று இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

 

 

இலங்கை அணியில் இருந்து ஜீவன் விலகல்

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஜீவன் மென்டிஸ் உலகக்கிண்ண இலங்கை அணியில் இருந்து விலகியுள்ளார். பயிற்சியின் போது ஏற்பட்ட தசை பிடிப்பே அவர் விலக காரணமக அமைந்துள்ளது. சிறிய ஓய்வின் பின்னர் விளையாட முடியும் என ஆரம்பத்தில் நம்பிக்கை இருந்த போதும்இ ஸ்கான் பரிசோதனையின் பின்னர் அவரின் உபாதை குணமடைய 3 வாரங்கள் ஆகும் என உறுதி செய்யப்பட்டுள்ளது, எனவே  இந்த தொடரில் விளையாட முடியாது அவார் விலகியுள்ளதுடன் நாடு திரும்பவுள்ளார். இந்த நிலையயில் கடந்த இரண்டு உலகக் கிண்ண தொடர்களிலும் இலங்கை அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய உப்புல்   தரங்க அணியில் இணைக்கப்பட்டுள்ளார். இன்று (25 ) சற்று முன்னர் உப்புல் தரங்கவை அணியில் இணைப்பதற்கு சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் கிரிக்கெட் குழு அனுமதி வழங்கியுள்ளது. 

கெயிலின் அதிரடியில் நொறுங்கிய சிம்பாப்வே

11ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் 15ஆவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி, 73 ஓட்டங்களால் சிம்பாப்வே அணியை தோற்கடித்துள்ளது. 

கான்பராவில் இன்று செவ்வாய்க்கிழமை(24) ஆரம்பமான 15ஆவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் – சிம்பாப்வே அணிகள் மோதின. 

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.  
இதனையடுத்து, முதலில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 50 ஒவரில், 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 372 ஓட்டங்களை குவித்தது.  

டக்வொர்த் லீவிஸ் முறைப்படி, 48 ஓவர்களில் 363 ஓட்டங்களை வெற்றி இலக்காக துரத்திய சிம்பாப்வே அணி, 44.3 ஓவர்களில் 289 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியை தழுவியது.   

 

இரட்டைச் சதம் விளாசினார் கெய்ல்


உலகக் கிண்ண கிரிக்கெட்டில் மேற்கிந்தியத்தீவுகளுக்கும் சிம்பாப்பே அணிக்கும் இடையில் கான்பராவில் செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்று வரும் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளின் கிறிஸ் கெய்ல் அதிரடியாக ஆடி இரட்டைச் சதம் பூர்த்தி செய்தார்.


சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியர் அல்லாத ஒருவர் இரட்டைச் சதம் அடித்தமை இதுவே முதல் தடவை.


உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் 15 ஆவது போட்டியாக இந்தப் போட்டியிலேயே கெய்ல் இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.


இதேவேளை, விக்கெட் ஒன்றிற்கான அதிகபட்;ச இணைப்பாட்டமான சௌரவ் கங்குலி ராகுல் ட்ராவிட் இணைந்து இலங்கைக்கு எதிராக எடுத்த 318 என்ற சாதனையை கெய்ல் சாமுவேல்ஸ் ஜோடி தகர்த்தது. இருவரும் இணைந்து 372 ஓட்டங்களை பகிர்ந்தனர்.


51 பந்துகளில் முதல் அரைசத்தத்தையும், 54 பந்துகளில் அடுத்து 50 ஓட்டங்களையும், 22 பந்துகளில் அடுத்த 50 ஓட்டங்களையும் அடித்த கெய்ல் 150 – 200 ஓட்டங்களை வெறும் 12 பந்துகளில் கடந்தார்.


50 ஓவர்களில் மேற்கிந்தியத்தீவுகள் ஒரு விக்கெட் இழப்புக்கு 372 ஓட்டங்களை பெற்றது. கெய்ல் 147 பந்துகளில் 215 (16 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகள்) ஓட்டங்களைப் பெற்று இறுதிப் பந்தில் ஆட்டமிழந்தார். சாமுவேல்ஸ் 133 ஓட்டங்கள் எடுத்தார். 

இங்கிலாந்திடம் கோட்டைவிட்ட ஸ்கொட்லாந்து

11ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் 14ஆவது போட்டியில் இங்கிலாந்து அணி, 119 ஓட்டங்களால் ஸ்கொட்லாந்து அணியை தோற்கடித்துள்ளது.

கிறிஸ்ட்சர்ச்சில் இன்று திங்கட்கிழமை(23) ஆரம்பமான 14ஆவது போட்டியில் இங்கிலாந்து – ஸ்கொட்லாந்து அணிகள் மோதின. 

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஸ்கொட்லாந்து அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. 

இதனையடுத்து, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 50 ஒவரில், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 303 ஓட்டங்களை குவித்தது. 

304 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்கினை துரத்திய ஸ்கொட்லாந்து, 42.2 ஓவர்களில் 184 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியை தழுவியது.  

தென்னாபிரிக்காவை திணறடித்த இந்தியா


1ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் 13ஆவது போட்டியில் இந்திய அணி, 130 ஓட்டங்களால் தென்னாபிரிக்க அணியை தோற்கடித்துள்ளது.

மெல்போர்னில் இன்று ஞாயிற்றுக்கிழமை(22) ஆரம்பமான 13ஆவது போட்டியில் இந்தியா – தென்னாபிரிக்கா அணிகள் மோதின. 

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 

முதலில் களமிறங்கிய இந்திய அணி, 50 ஒவரில், 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 307 ஓட்டங்களை குவித்தது. 

இந்தியா  சார்பாக தவான் 146 பந்துகளுக்கு 16 நான்கு ஓட்டங்கள் மற்றும் இரண்டு 6 ஓட்டங்கள் அடங்கலாக 137 ஓட்டங்களை குவித்தார்.

60 பந்துகளை எதிர்கொண்ட ரஹானே, 3 ஆறு ஓட்டங்கள், 7 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 79 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தார்.

விராட் கோலி 60 பந்துகளுக்கு 3 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 46 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்
அணித்தலைவர் டோனி, 11 பந்துகளுக்கு முகங்கொடுத்து 18 ஓட்டங்களை பெற்றநிலையில் ஆட்டமிழந்தார்.

308 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்கினை துரத்திய தென்னாபிரிக்கா, 40.2 ஓவர்களில் 177 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியை தழுவியது.

ஆப்கானை வீழ்த்தி வெற்றியை ருசிபார்த்தது இலங்கை

1ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் 12ஆவது போட்டியில் இலங்கை அணி, 4 விக்கெட்டுக்களால் ஆப்கானிஸ்தான் அணியை தோற்கடித்து தனது முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

டுனேடில் இன்று ஞாயிற்றுக்கிழமை(22) ஆரம்பமான 12ஆவது போட்டியில் இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. 

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. 

இதனையடுத்து, முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, 49.4 ஒவரில், சகல விக்கெட்டுக்களையும் இழந்து 232 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 

233 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்கினை துரத்திய இலங்கை அணி, 48.1 ஓவர்களில் 236 ஓட்டங்களை பெற்று வெற்றியை தனதாக்கியது. 

இலங்கை அணி சார்பாக மஹேல ஜயவர்தன120 பந்துகளை எதிர்கொண்டு 8 நான்கு ஓட்டங்கள் மற்றும் ஒரு 6 ஓட்டம் அடங்கலாக 100 ஓட்டங்களை குவித்த நிலையில் ஆட்டமிழ்ந்தார்.

இன்றைய போட்டியுடன் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை ரு போட்டியில் தோல்வியும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.