அவுஸ்திரேலியாவை வெள்ளையடித்தது இந்தியா

 

அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரின் மூன்றாவது போட்டியிலும், இந்தியா அணி வெற்றிபெற்று, இத்தொடரை இந்திய அணி, 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

 

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 197 ஓட்டங்களை பெற்றது.

 

இதில், மேற்படி போட்டியில், அவுஸ்திரேலிய அணித் தலைவராக கடமையாற்றிய ஷேன் வொற்சன் 71 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 6, ஆறு ஓட்டங்கள், 10, நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 124 ஓட்டங்களைப் பெற்றார்.

 

பந்து வீச்சில் இந்திய அணி சார்பாக ஆஷிஷ் நெஹ்ரா, இரவிச்சந்திரன் அஸ்வின், யுவராஜ் சிங், இரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் தலா ஒவ்வொறு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

 

பதிலுக்கு 198 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, இனிங்ஸின் இறுதிப் பந்தில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

 

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பாக, ஆரம்பத் துடுப்பாட்டவீரர் ரோஹித் ஷர்மா 38 பந்துகளில் ஒரு ஆறு ஓட்டம், 5, நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 52 ஓட்டங்களையும் விராத் கோலி 36 பந்துகளில், ஒரு ஆறு ஓட்டம், இரண்டு, நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 50 ஓட்டங்களையும் சுரேஷ் ரெய்னா, 25 பந்துகளில், ஆட்டமிழக்காமல் ஒரு ஆறு ஓட்டம், ஆறு, நான்கு ஓட்டங்கள், உள்ளடங்கலாக 49 ஒட்டங்களையும் பெற்றனர்.

 

இத்தொடரின் நாயகனாக, விராத் கோலியும் இப்போட்டியின் நாயகனாக ஷேன் வொற்சனும் தெரிவாகினர்.

 

இவ் வெற்றியுடன்  இருபதுக்கு-20 சர்வதேச போட்டிகளுக்கான தரவரிசையில் முதலிடத்துக்கு இந்தியா சென்றுள்ளது.    

நமீபியா, இங்கிலாந்து, பங்களாதேஷ், மே.தீவுகள் வெற்றி

 

இடம்பெற்றுவரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணப் போட்டிகளில்,  இன்று இடம்பெற்ற போட்டிகளில், நமீபிய, இங்கிலாந்து, பங்களாதேஷ், மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் வெற்றிபெற்றன.

 

நமீபிய அணிக்கும் நடப்புச் சம்பியன்களான தென்னாபிரிக்க அணிக்குமிடையிலான போட்டியில், நமீபிய அணி 2 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. இந்தத் தோல்வியுடன், இந்த உலகக் கிண்ணத்திலிருந்து தென்னாபிரிக்கா வெளியேற்றப்பட்டது.

 

தென்னாபிரிக்கா: 136/9 (50 ஓவ.) (வில்லியம் லுடிக் 42 (98). பந்துவீச்சு: மைக்கல் வான் லிங்கென் 10-2-24-4, பிறிட்ஸ் கோட்ஸே 10-4-16-3.)

 

நமீபியா: 137/8 (39.4 ஓவ.) (லொஹான் லௌரன்ஸ் 58 (97). பந்துவீச்சு: ஸியாட் ஏப்ரஹாம்ஸ்; 8.4-3-18-2, ஸீன் வைட்ஹெட்; 7-0-27-2.

 

இங்கிலாந்து, சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான போட்டியில், இங்கிலாந்து அணி 129 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

 

இங்கிலாந்து: 288/4 (50 ஓவ.) (ஜக் பேர்ஹம் 106 (104), டான் லோரன்ஸ் 59 (67), மக்ஸ் ஹோல்டென் 51 (90). பந்துவீச்சு: றுகாரே மகரிரா 10-0-36-2.)

 

சிம்பாப்வே:  159/10 (43.4 ஓவ.) (ஜேர்மி ஐவீஸ் 91 (132), பந்துவீச்சு: சகீப் மஹ்மூட்9.4-2-39-4.)

 

பங்களாதேஷ் அணிக்கும் ஸ்கொட்லாந்து அணிக்குமிடையிலான போட்டியில், இத்தொடரை நடத்தும் பங்களாதேஷ் அணி வெற்றிபெற்றது.

 

பங்களாதேஷ்: 256/6 (50 ஓவ.) (நஸ்முல் ஹொஸைன் ஷான்டோ ஆட்டமிழக்காமல் 113 (117), மெஹெடி ஹஸன் 51 (48), சாய்ப் ஹஸன் 49 (108). பந்துவீச்சு: மொஹமட் காபர் 10-0-60-4.)

 

ஸ்கொட்லாந்து: 142/10 (47.2 ஓவ.) (அஸீம் டார் 50 (89). பந்துவீச்சு: மொஹம்மட் ஸைப்புட்டின் 7.2-0-17-3, சாலே அஹ்மட் ஷவோன் 10-2-27-3, அரிபுல் இஸ்லாம் 10-0-28-2.)

 

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் பிஜி அணிக்குமிடையிலான போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி, 262 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

 

மேற்கிந்தியத் தீவுகள்: 340/7 (50) (ஷமர் ஸ்பிறிங்கர் 106 (109), கிட்ரோன் போப் 76 (77), ஜைட் கூலி 66 (75). பந்துவீச்சு: சக்கக்வா டிகோய்சுவா 10-0-59-6)

 

பிஜி: 78/10 (27.3) (பெனி வுனிவக்கா 29 (49). பந்துவீச்சு: சக்கக்வா டிகோய்சுவா 10-0-59-6, பந்துவீச்சு: ஜிட்ரோன் போப் 7-2-24-4, அல்ஸாரி ஜோசப் 7-1-15-3, கிறிஸ்டன் காளிசரண் 6.3-1-21-2.)

போட்டி அவுஸ்திரேலியாவுக்கு: தொடர் இந்தியாவுக்கு

 

அவுஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மூன்று இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி அவுஸ்திரேலியாவுக்கெதிராக விளையாடி வருகின்ற நிலையில், சிட்னியில் இன்று இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் அவுஸ்திரேலிய அணிக்கு ஆறுதல் வெற்றி கிடைத்தது.

 

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித்தலைவி மிதாலி ராஜ், தமது அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடும் என தெரிவித்தார். அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்க்கெட்டுகளை இழந்து 136 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, எலைஸ் பெரி, 3, ஆறு ஓட்டங்கள், 4, நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 41 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 55 ஓட்டங்களையும் பெத் மூனி 34 பந்துகளில் 3, நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 34 ஓட்டங்களையும் அணித்தலைவி மெக் லன்னிங் 25 பந்துகளில் ஒரு ஆறு ஓட்டம், 2, நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 26 ஓட்டங்களையும் பெற்றனர்.

 

பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக ராஜேஸ்வரி கயாகவாட் 2 விக்கெட்டுகளையும் டீப்தி ஷர்மா, ஜூலான் கோஸ்வாமி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

 

பதிலுக்கு 137 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 121 ஓட்டங்களை மாத்திரமே இழந்து 15 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, வேலாஸ்வாமி வனிதா, ஒரு ஆறு ஓட்டம், 3, நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 25 பந்துகளில் 28 ஓட்டங்களையும் ஹர்மன்பிரீட் கௌர் 2, ஆறு ஓட்டங்கள், ஒரு நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 17 பந்துகளில் 24 ஓட்டங்களையும் வேதா கிருஷ்ணமூர்த்தி, 21 பந்துகளில் ஒரு நான்கு ஓட்டம் ஒரு ஆறு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 21 ஓட்டங்களையும் பெற்றார்.

 

பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக துடுப்பாட்டத்தில் கலக்கிய எலைஸ் பெரி, 4 விக்கெட்டுகளையும் றெனி பரேல் 2 விக்கெட்டுகளையும் ஜெஸ் ஜோனாசென், கிறேஸ் ஹரிஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

 

இப்போட்டியின் நாயகியாக எலைஸ் பெரியும் தொடரின் நாயகியாக ஜூலான் கோஸ்வாமியும் தெரிவாகினர். ஏற்கெனவே முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை, 2-1க்கு என்ற ரீதியில் கைப்பற்றியது.

தொடரைக் கைப்பற்றியது நியூசிலாந்து

 

பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் மூன்றாவது போட்டியில், நியூசிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது. இதன்மூலம், அத்தொடரையும் அவ்வணி கைப்பற்றியுள்ளது.

 

ஒக்லான்டில் இடம்பெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 47.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 290 ஓட்டங்களைப் பெற்றது. 3 விக்கெட்டுகளை இழந்து 215 ஓட்டங்களுடன் காணப்பட்ட அவ்வணி, அதன் பின்னர் விக்கெட்டுகளை இழந்திருந்தது.

 

துடுப்பாட்டத்தில் பாபர் அஸாம் 83 (77), மொஹமட் ஹபீஸ் 76 (60), சப்ராஸ் அஹ்மட் 41 (50), ஷொய்ப் மலிக் 32 (27) ஓட்டங்களைப் பெற்றனர்.

 

பந்துவீச்சில் அடம் மில்ன் 3, ட்ரென்ட் போலட் 2, மற் ஹென்றி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

291 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, 35.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 210 ஓட்டங்களுடன் காணப்பட்டபோது மழை குறுக்கிட, 43 ஓவர்களில் 263 என்ற இலக்கு வழங்கப்பட்டது. அவ்வணி, 42.4 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
துடுப்பாட்டத்தில் கேன் வில்லியம்ஸன் 84 (86), மார்ட்டின் கப்டில் 82 (81), கொரே அன்டர்சன் 35 (29) ஓட்டங்களைப் பெற்றனர்.

 

பந்துவீச்சில், மொஹமட் ஆமிர், அஸார் அலி இருவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

இப்போட்டியின் நாயகனாக, சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியதோடு, 4 பிடிகளையும் பிடித்த மார்ட்டின் கப்டில் தெரிவானார்.

 

இத்தொடரின் 2ஆவது போட்டி, மழை காரணமாகக் கைவிடப்பட்டிருந்த நிலையில், இத்தொடரை நியூசிலாந்து அணி, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

 

 

இலங்கை அணியின் பயிற்சியாளராக மீண்டும் போர்ட்

 

இங்கிலாந்தின் கவுண்டி அணியான சரேயின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகி, இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கிரஹாம் போர்ட் செல்லவுள்ளார் என அவ்வணி அறிவித்துள்ளதையடுத்து, இரண்டாவது தடவையாக இலங்கை அணியின் பயிற்விப்பாளராக கிரஹாம் போர்ட் பணியாற்றவுள்ளார்.

 

2019ஆம் ஆண்டு உலகக்கிண்ணம் வரை பயிற்சியாளராக கடைமையாற்றுவதற்கு போர்ட் கைச்சாத்திட்டுள்ளார் என்று நம்பப்படுகையில், அடுத்த மாத ஆரம்பத்திலிருந்து, தனது பணியை போர்ட் ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

2012 ஆரம்பத்திலிருந்து இரண்டு வருடங்களுக்கு இலங்கையணியின் பயிற்றுவிப்பாளராக இருந்த போர்ட், கடந்த வருட நடுப்பகுதியில் இருந்து மீண்டும் பயிற்சியாளராவதற்கு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தபோதும், இம்மாதமே, இலங்கை கிரிக்கெட் சபை தேர்தல் இடம்பெற்று நிர்வாகம் மாறுவதால், அதற்றகு பணியை ஏற்க மறுத்திருந்தார்.

 

கடந்த செப்டெம்பர் மாதம், மார்வன் அத்தப்பத்து பயிற்சியாளர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்திருந்த நிலையில், இடைப்பட்ட ஐந்து மாத காலப்பகுதியில் இடைக்கால பயிற்சியாளராக ஜெரோம் ஜெயவர்த்தன கடமையாற்றியிருந்தார்.

 

 

 

தென்னாபிரிக்கா -இங்கிலாந்து டெஸ்ட் தொடர் மீள் பார்வை

 

தென்னாபிரிக்கா, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற டெஸ்ட்  தொடரில் தோல்வியடைந்ததன் மூலம் தமது முதலிடத்தை தென்னாபிரிக்க அணி இழந்தது. சொந்த நாட்டில் நடைபெற்ற தொடரில் 1 இற்கு 2 என்ற அடிப்படையில் 4 போட்டிகள் கொண்ட தொடரில் தென்னாபிரிக்க அணி தோல்வியை சந்தித்தது.

 

மோசமான இந்திய தொடரின் மூலம் மிகப் பெரிய அடியை தென்னாபிரிக்க அணி எதிர்கொண்டது. சொந்த நாட்டில் மீள் வருகையை காட்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்த போதும் அது நடைபெறவில்லை. ஆனால் தொடர் நிறைவில் அணித் தலைமை மாற்றம் தென்னாபிரிக்க அணியின் மீள் வருகையை காட்டுகின்றது. ஆக டீ வில்லியர்ஸிடம் இருந்து தலைமைத்துவத்தை மாற்றியமை பிழையான முடிவு என்பதை சிந்திக்க வைத்துள்ளது.

 

2015 ஆம்ஆண்டு மிக மோசமாக தென் ஆபிரிக்கா அணிக்கு அமைந்தது. ஹஷிம் அம்லாவின் தலைமையில் தென் ஆபிரிக்கா அணி டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற முடியவில்லை. அணியின் வீரர்கள் மாத்திரம் வெற்றி தோல்விக்கு காரணம் அல்ல. தெரிவுக் குழுவும் அதன் முடிவுகளும் கூட காரணம் என்பதை இந்த தொடர் முடிவு காட்டியுள்ளது.

 

இந்த தொடரில் முதற் போட்டியில் தோல்வியையும், அடுத்த போட்டியில் சமநிலை முடிவையும் பெற்ற பின்னர் ஹஷிம் அம்லா தனது பதவியில் இருந்து விட்டு விலகினார். மீண்டும் டீ வில்லியர்ஸ் அணித் தலைவராக பதவியேற்றார். அணி 2 போட்டிகளில் 1 தோல்வி. 1 வெற்றி. மீண்டும் குயின்டன் டி கொக் விக்கெட்காப்பாளராக இணைக்கப்பட்டார். சதம் அடித்தார். இந்திய டெஸ்ட் தொடரில் இவருக்கு நிச்சயம் வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்க வேண்டும். ஒரு வீரர் ஒரு நாள் சர்வதேசப் போட்டித் தொடரில் அபார போர்மில் ஓட்டங்களை குவித்த வரும் வேளையில் ஏன் டெஸ்ட் போட்டிகளில் அவரால் முடியாது? தெரிவுக்குழுவினரின் தவறுகள் அணிக்கு பின்னடைவை உருவாக்கும். ஒரு காலத்தில் இந்திய அணியின் தலைவராக சச்சின் இருக்கும் வேளையில் எனக்கு தேவையான அணியை தராமல், அவர்கள் தரும் அணியை வைத்து வெல்ல வேண்டும் என்றால் எப்படி சாத்தியம்? என கூறி இருந்தார். தென் ஆபிரிக்கா அணியின் தோல்விகளுக்கு பதில் கூற வேண்டியவர்கள் தெரிவுக் குழுவினரே.

 

ஆனாலும் தென்னாபிரிக்க அணியின் வீழ்ச்சி என்று மாத்திரம் நாம் இங்கே பேசிக்கொண்டு இருக்க முடியாது. இங்கிலாந்து அணியின் எழுச்சி. இது முக்கியமான விடயம். இங்கிலாந்து அணி மீண்டும் எழுந்து விட்டது. அதுவும் தென்னாபிரிக்க அணியின் தோல்விகளுக்கு ஒரு காரணம். கடந்த காலங்களில் இங்கிலாந்து அணி தென்னாபிரிக்காஅணியை அவர்கள் நாட்டில் வைத்து பல தொடர்களில் வெற்றி பெற்றுள்ளனர்.  எனவே இந்த தொடரில் தென் ஆபிரிக்கா அணி தோல்வியடைந்துள்ளது எனக் கூற முடியாது.

 

இங்கிலாந்து அணி துடுப்பாட்டம், பந்துவீச்சு என இரு பக்கமாகவும் மிகச் சிறப்பாக செயற்பட்டு வருகின்றது. பலமான தென் ஆபிரிக்கா அணியை அவர்கள் நாட்டில் வைத்து தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து வெற்றி பெறுவது என்பது இலகுவானது அல்ல. அதனை செய்தே தொடரைக் கைப்பற்றியுள்ளது இங்கிலாந்து அணி. 

தொடர் மீள் பார்வை

முதற் போட்டி

இங்கிலாந்து அணி 241 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 303 ஓட்டங்களைப் பெற்றது.

நிக் கொம்ப்டன் – 80 , ஜேம்ஸ் ரெய்லர் – 75

டேல் ஸ்டைன் – 70/4 , மோர்னி மோர்க்கல் 76/4

தென்னாபிரிக்க  அணி 214 ஓட்டங்களைப் பெற்றது.

டீன் எல்கர் – 118

ஸ்டுவர்ட் ப்ரோட் – 25/4 , மொயின் அலி 69/4

இங்கிலாந்து அணி இரண்டாம் இன்னிங்சில் 326 ஓட்டங்களைப் பெற்றது.

ஜொனி பெயார்ஸ்டோ- 79, ஜோ ரூட் 73

டனி பீடிட் – 153/5 , ஸ்டையான் வான் ஸில் – 20/3

416 என்ற வெற்றி இலக்குடன் துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி 174 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்களையும் இழந்தது.

டீன் எல்கர் – 40

ஸ்டீபன் பின் – 42/4,  மொயின் அலி 47/3

போட்டி நாயகன் –  மொயின் அலி

இரண்டாவது போட்டி

இந்தப் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது .

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 658 ஓட்டங்கள்.

பென் ஸ்டோக்ஸ் 258, ஜொனி பெயார்ஸ்டோ – 150(ஆட்டமிழக்காமல்)

399 ஓட்டங்களை ஆறாவது விக்கெட் இணைப்பாட்டமாக இருவரும் பெற்றனர். இது ஆறாவது விக்கெட்டுக்கான புதிய உலக சாதனை ஆகும்.

கஜிஸ்கோ ரபடா – 175/3

தென்னாபிரிக்கா – 627/7

ஹஷிம் அம்லா – 201, டெம்பா பவுமா – 102 (ஆட்டமிழக்காமல்)

ஸ்டுவர்ட் ப்ரோட் – 94/2, ஸ்டீபன் பின் – 132/2

இங்கிலாந்து 159/6 என்ற நிலையில் போட்டி சமநிலையில் நிறைவானது.

ஜொனி பெயர்ஸ்டோ- 30(ஆட்டமிழக்காமல்)

டனி பீடிட் – 38/3

போட்டியின் நாயகன் – பென் ஸ்டோக்ஸ்

மூன்றாவது  போட்டி

இங்கிலாந்து அணி 7 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.

தென்னாபிரிக்க அணி 313 ஓட்டங்களைப் முதல் இன்னிங்சில் .பெற்றது.

டீன் எல்கர் – 46, ஹஷிம் அம்லா – 40

பென் ஸ்டோக்ஸ் 53/3 , ஸ்டுவர்ட் ப்ரோட் – 82/2, ஸ்டீபன் பின் – 50/2

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 323 ஓட்டங்கள்.

ஜோ ரூட்ஸ் – 110, பென் ஸ்டோக்ஸ் 58

கஜிஸ்கோ ரபடா – 78/5, மோர்னி மோர்க்கல் 76/3

தென்னாபிரிக்க அணி 83 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்களையும் இழந்து 74 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

கஜிஸ்கோ ரபடா – 16

ஸ்டுவர்ட் ப்ரோட் – 17/6, பென் ஸ்டோக்ஸ் – 24/2

இங்கிலாந்து அணி மூன்று விக்கெட்களை இழந்து 74 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது. .

அலஸ்டயர் குக் – 48

டீன் எல்கர் – 10/2

போட்டியின் நாயகன் – ஸ்டுவர்ட் ப்ரோட்

நான்காவது போட்டி

தொடரை இழந்த போதும் தென்னாபிரிக்க அணி நம்பிக்கையுடன் 280 ஓட்டங்களினால் வெற்றி பெற்று மீள் வருகை ஒன்றை உருவாக்கியது. .

தென்னாபிரிக்க அணி 475 ஓட்டங்களைப் முதல் இன்னிங்சில் .பெற்றது.

குயின்டன் டி கொக் – 129 (ஆட்டமிழக்காமல்) சீன் குக் – 115, ஹஷிம் அம்லா – 109

பென் ஸ்டோக்ஸ் 86/4 , ஸ்டுவர்ட் ப்ரோட் – 91/2, மொயின் அலி – 104/2

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 342

ஜோ ரூட்ஸ் – 76, அலஸ்டயர் குக் – 76

கஜிஸ்கோ ரபடா – 112/7, மோர்னி மோர்க்கல் 73/2

தென்னாபிரிக்க அணி 5விக்கெட்களை இழந்து 248  ஓட்டங்களைப் பெற்று 382 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்து தமது துடுப்பாட்டத்தை இடை நிறுத்தியது.

ஹஷிம் அம்லா – 96, டெம்பா பவுமா – 78(ஆட்டமிழக்காமல்)

ஜேம்ஸ் அன்டர்சன் – 47/3

இங்கிலாந்து அணி மூன்று 102  ஓட்டங்களைப் பெற்று 280 ஓட்டங்களினால் தொல்வியடைந்தது.

ஜேம்ஸ் ரெய்லர் – 24

கஜிஸ்கோ ரபடா – 32/6, மோர்னி மோர்க்கல் 36/3

போட்டியின் நாயகன் – கஜிஸ்கோ ரபடா

 

இங்கிலாந்து அணி துடுப்பாட்டம் , பந்துவீச்சு என மிகச் சிறப்பாக செயற்பட்டுள்ளனர். குறிப்பாக சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ் மிகச் சிறப்பாக துடுப்பாட்டம், பந்துவீச்சு என கலக்கி தொடர் நாயகன் விருதை தனதாக்கினார். துடுப்பாட்ட வரிசையில் ஒருவர் இல்லாவிட்டால், இன்னொருவர் என மிகச்சு சிறப்பாக இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்கள் செயற்பட்டுள்ளனர். பந்துவீச்சில் ஸ்டுவர்ட் ப்ரோட் மிகச் சிறப்பாக பந்துவீசியுள்ளார். பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி ஆகியோரும் சிறப்பாக பந்து வீசினர்.

 

தென்னபிரிக்க அணியில் வேர்ணன் பிலாண்டர் இல்லாமை, டேல் ஸ்டைன் முதற் போட்டியின் பின் விளையாடமை மிகப் பெரிய பின்னடைவே. கஜிஸ்கோ ரபடா இறுதி போட்டிகளிலே போர்முக்கு வந்தார். மோர்னி மோர்க்கல் சராசரியாக விக்கெட்களை வீழ்த்திய போதும் இங்கிலாந்து அணியை அச்சுறுத்தும் அளவுக்கு பந்துவீசவில்லை. சுழற்பந்துவீசில் தென்னாபிரிக்க அணி கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும். சரியான முறையில் அவர்களுக்கு அமையவில்லை. துடுப்பாட்டத்தில் டீ வில்லியர்ஸ் சோபிக்கத்தவறியமை தோல்விகளுக்கு முக்கிய காரணம். ஹஷிம் அம்லா தலைவராக சரியா செயற்படாத போதும் துடுப்பாட்டத்தில் கை விடவில்லை. குயிண்டன் டி கொக் மீண்டும் அணிக்குள் வந்துள்ளமை எதிர்காலத்தில் பலமாக இருக்கும் என நம்பலாம். ஆரம்ப ஜோடி இன்னமும் தென்னபிரிக்கா அணிக்கு பிரச்சினையாகவே உள்ளது. சில சில பிரச்சினைகள் காரணமாகவே தென்னாபிரிக்க அணி தோல்விகளை சந்தித்துள்ளது. அவற்றை சீர் செய்தால் மீண்டும் வெற்றி அணியாக முன்னேற்றம் காண முடியும்.

 

தொடர் ஆரம்பிக்கும் வேளையில் தரபப்டுத்தலில் முதலிடத்தில் இருந்த தென்னாபிரிக்க அணி முதலிரு தோல்விகளுடனும் முதலிடத்தை இழந்தது. இந்திய அணியிடம் தொடர் தோல்வியடைந்து புள்ளிகளை இழந்த தென்னபிரிக்க அணி இந்த தொடர் தோல்வியிலும் புள்ளிகளை இழக்க இந்திய அணி முதலிடத்தை பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி ஐந்தாமிடத்தில்  இருந்து நான்காமிடம் நோக்கி முன்னேறியுள்ளது. தென்னாபிரிக்க அணி மூன்றாமிடத்துக்கு பின் தள்ளப்பட்டுள்ளது.

 

200 இற்கு மேற்பட்ட ஓட்டங்களை இந்த தொடரில் பெற்றவர்கள் 

ஹஷிம் அம்லா                      4              7               470        201         67,14      46,90    2              1

பென் ஸ்டோக்ஸ்                    4              7               411        258         58,71     109,01 1              1

ஜோ ரூட்                                  4              8               386        110         55,14      63,38    1             3

ஜொனி  பெயார்ஸ்டோ           4             7               359        150 *     71,80      72,08    1              1

டீன்  எல்கர்                               4              7               284        118 *     47,33      49,47    1              0

டெம்பா  பவுமா                        4              7               248        102 *     49,60      54,50    1              1

நிக் கொம்ப்டன்                        4              8               245        85           30,62      37,80    0              1

ஏபி டி வில்லியர்ஸ்                 4              7               210        88           30,00      49,41    0              1

(போட்டி, இன்னிங்ஸ், மொத்த ஓட்டங்கள், கூடுதலான ஓட்டங்கள், சராசரி, ஸ்ட்ரைக் ரேட், சதம், அரைச் சதம்  )

 

தொடரில் 10 விக்கெட்களுக்கு மேல் கைப்பற்றியவர்கள்

கஜிஸ்கோ  ரபடா                                  3             6              109,4      482        22           7/112     13/144 21,90     4,39

ஸ்டுவர்ட்  ப்ரோட்                                 4              7              139,1      371        18           6/17       8/99       20,61     2,66

மோர்னி மோர்கல்                                4              8              151,5      446        15           4/76       5/109    29,73     2,93

பென் ஸ்டோக்ஸ்                                  4              7              113,1      350        12           4/86       5/77       29,16     3,09

ஸ்டீபன் பின்                                          3             5              90,4         287        11           4/42      6/91       26,09    3,16

டனி பீடிட்                                                3              6              126,0      455        10           5/153     6/216    45,50    3,61

மொயின் அலி                                         4             6              161,0      485        10           4/69       7/116     48,50     3,01

(போட்டி, இன்னிங்ஸ், ஓவர்கள், வழங்கிய  ஓட்டங்கள், விக்கெட்கள், இன்னிங்ஸ் சிறந்த பந்துவீச்சு, போட்டியின் சிறந்த பந்துவீச்சு, சராசரி,  ஓட்ட சராசரி வேகம்   )

பெப். 24இல் ஆரம்பிக்கிறது ஆசியக் கிண்ணம்

 

13ஆவது ஆசியக் கிண்ணப் போட்டிகள், எதிர்வரும் பெப்ரவரி 24ஆம் திகதி, இந்திய, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டியுடன் ஆரம்பிக்கவுள்ளன.

 

இப்போட்டிகள், பங்களாதேஷில் இடம்பெறவுள்ளதோடு, நடப்புச் சம்பியன்களாக இலங்கை காணப்படுகிறது.
பிரதான தொடரில், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகியவற்றோடு, தகுதிகாண் போட்டிகளின் மூலமாக, துணை அங்கத்துவ நாடொன்றும், இத்தொடரில் பங்குபற்றவுள்ளது.

 

தகுதிகாண் போட்டிகள், பெப்ரவரி 19ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதுடன், இப்போட்டிகளில், ஆப்கானிஸ்தான், ஓமான், ஹொங் கொங், ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

 

வழக்கமான ஆசியக் கிண்ணப் போட்டிகள், 50 ஓவர்கள் கொண்ட தொடராக அமையும் நிலையில், இம்முறை போட்டிகள், இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடராக அமையவுள்ளது.

 

போட்டி அட்டவணை:

 

பெப். 24: இந்தியா எதிர் பங்களாதேஷ்

 

பெப். 25: இலங்கை எதிர் தகுதிகாண் அணி

 

பெப். 26: பங்களாதேஷ் எதிர் தகுதிகாண் அணி

 

பெப். 27: இந்தியா எதிர் பாகிஸ்தான்

 

பெப். 28: பங்களாதேஷ் எதிர் இலங்கை

 

பெப். 29: பாகிஸ்தான் எதிர் தகுதிகாண் அணி

 

மார்ச் 1: இந்தியா எதிர் இலங்கை

 

மார்ச் 2: பங்களாதேஷ் எதிர் பாகிஸ்தான்

 

மார்ச் 3: இந்தியா எதிர் தகுதிகாண் அணி

 

மார்ச் 4: பாகிஸ்தான் எதிர் இலங்கை

 

மார்ச் 6: இறுதிப் போட்டி

 

அலன் போடர் பதக்கத்தை வென்றார் டேவிட் வோணர்

 

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கான, ஆண்டின் சிறந்த வீரருக்கான அலன் போடர் பதக்கத்தை, ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டேவிட் வோணர் வென்றார். தலைவரான ஸ்டீவன் ஸ்மித்தை முந்தியே, இக்கௌரவத்தை அவர் பெற்றுக் கொண்டார். ஆண்டின் டெஸ்ட் வீரருக்கான விருதையும், டேவிட் வோணரே வெற்றிகொண்டார்.

 

சிறந்த வீராங்கனைக்கான மெலின்டா கிளார்க் விருதை, எலைஸ் பெரி வெற்றிகொண்டார்.
ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான சிறந்த வீரர் விருதை, கிளென் மக்ஸ்வெல், சிறந்த உள்ளூர் பெறுபேறுகளுக்கான விருதை அடம் வோஜஸ், சிறந்த வளர்ந்துவரும் வீரருக்கான விருதை, அலெக்ஸ் றொஸ்-உம் வென்றனர்.

 

19 வயதுக்குட்பட்டோர் உலகக் கிண்ணம்: பங்களாதேஷ், இங்கிலாந்து வெற்றி

 

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணப் போட்டிகள், பங்களாதேஷில் இன்று ஆரம்பித்த நிலையில், முதல்நாள் இடம்பெற்ற போட்டிகளில், பங்களாதேஷ், இங்கிலாந்து அணிகள் வெற்றிபெற்றன.

 

பங்களாதேஷ், தென்னாபிரிக்க அணிக்களுக்கிடையிலான போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றது. நஸ்முல் ஹொஸைன் ஷான்டோ 73 (82), ஜொய்ராஸ் ஷேக் 46 (50), பினாக் கோஷ் 43 (51) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் வியான் முல்டெர், 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 

பதிலளித்தாடிய தென்னாபிரிக்க அணி,  48 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 197 ஓட்டங்களைப் பெற்றுத் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் லியம் ஸ்மித் 100 (146) ஓட்டங்களைப் பெற்றார்.

 

பந்துவீச்சில், மெஹ்டி ஹஸன், மொஹமட் சய்‡புடின் இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும் சயீட் சர்கார், சாலே அஹ்மட் ஷவொன் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

 

இங்கிலாந்து அணிக்கும் பிஜி அணிக்குமிடையிலான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 50 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 371 ஓட்டங்களைப் பெற்றது.

 

துடுப்பாட்டத்தில் டான் லொவ்ரென்ஸ் 173 (150), ஜக் பேர்ஹம் 148 (137) ஓட்டங்களைப் பெற்றனர். பதிலளித்தாடிய பிஜி அணி, 27.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 72 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுத் தோல்வியடைந்தது. அவ்வணி சார்பாக அதிகபட்சமாக, பெனி வுனிவாகா, 36 (74) ஓட்டங்களைப் பெற்றார்.

 

பந்துவீச்சில் சஹிக் மஹ்மூட், சாம் குர்றான் இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும் பென் கிறீன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

 

ஆமிருக்கு ஏளனம்: அறிவிப்பாளருக்குக் கண்டனம்

 

நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3ஆவது இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியில், பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஆமிரை ஏளனம் செய்த மைதான அறிவிப்பாளருக்கு, நியூசிலாந்து கிரிக்கெட் சபை, உத்தியோகபூர்வக் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது.

 

ஸ்பொட் பிக்சிங்கில் ஈடுபட்டு, தனது தண்டனைக் காலத்தைப் பூர்த்தி செய்த பின்னர், நியூசிலாந்துத் தொடரிலேயே ஆமிர், முதன்முறையாகப் பங்குபற்றியிருந்தார். இதில், ஆமிர் பந்துவீசும்போது, பெட்டியில் பணம் வீழ்வது போன்றதான ஒலியை எழுப்பியிருந்தார்.

 

இதற்காக, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முகாமைத்துவத்திடம் முதலில் மன்னிப்புக் கோரியிருந்த நியூசிலாந்து கிரிக்கெட் சபை, தற்போது, உத்தியோகபூர்வமான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது.
இதேவேளை, இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியிலும், நியூசிலாந்து இரசிகரொருவர், ஆமிரை நோக்கிப் பணத்தையும் நகையையும் காண்பித்ததாக அறிவிக்கப்படுகிறது.