எனக்கு டுவிட்டர் இல்லை: யூனுஸ் கான்

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருடன் தான் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடவுள்ளதாக வெளியான  செய்தி பொய்யானது என பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யூனுஸ் கான் தெரிவித்துள்ளார். 

யூனுஸ் கான்,  டுவிட்டர் மூலம் இதை அறிவித்துள்ளதாக செய்தி வெளியாகி இருந்தது. 

இந்த நிலையில் தனக்கு டுவிட்டர் கணக்கு எதுவும் இல்லை எனவும் அது பொய்யான டுவிட்டர் கணக்கு எனவும் யூனுஸ் கான் தெரிவித்துள்ளார்.  இப்போதைக்கு தன்னுடைய துடுப்பாட்டத்தை பற்றி மாத்திரமே தான் யோசித்து வருவதாகவும், மற்ற எந்த விடயங்கள் தொடர்பாகவும் தான் சிந்திக்கவில்லை எனவும் மேலும் தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் யூனுஸ் கானின் ஒருநாள் சர்வதேசப் போட்டி பெறுதிகள் பற்றி கடும் விமர்சனம் செய்து வருகின்றனர். உலகக்கிண்ண தொடரின் இரண்டு போட்டிகளிலும் இவர் பிரகாசிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய பந்துவீச்சாளர் ஷமி உபாதை


இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய மித வேகப்பந்து வீச்சாளரான மொஹம்மட் ஷமி உபாதையடைந்துள்ளார்.  
இதன் காரணமாக நாளை மறுதினம்( 01) ஜநடைபெறவுள்ள ஐக்கிய அரபு ராட்சிய அணியுடனான பொடடியில் அவர் விளையாட மாட்டார் என இந்திய அணியின் முகாமைத்துவம் அறிவித்துள்ளது. 

முழங்காலில் ஏற்பட்டுள்ள உபாதையே அவர் விலகக் காரணமாக அமைந்துள்ளது. மற்றைய போட்டிகளை கருத்திற்கொண்டு அவருக்கு இந்த போட்டியில் இருந்து ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இவருக்கு பதிலாக புவனேஸ்வர் குமார் அணியில் இணைத்துக்கொள்ளப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. 

இந்திய அணி விளையாடிய வெற்றி பெற்ற இரண்டு உலகக் கிண்ணப் போட்டிகளிலும் பாகிஸ்தான், தென் ஆபிரிக்கா அணிகளுக்கு எதிராக 6 விக்கெட்களை    மொஹம்மட் ஷமி கைப்பற்றியுளார்.

 

 

சீறின சிங்கங்கள், பணிந்தது பங்களாதேஷ்


உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் 18ஆவது போட்டியில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி இலங்கை அணி, 92 ஓட்டங்களால் அபார வெற்றிப்பெற்றது.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டி இன்று வியாழக்கிழமை(26) மெல்போர்னில் ஆரம்பமாகியது.

நாணய சுழற்சியில்  வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 50 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட்டை மாத்திரம் இழந்து 332 ஓட்டங்களை குவித்தது.

136 பந்துகளுக்கு முகங்கொடுத்து அதிரடியாக ஆடிய தில்ஷான், 22 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 161 ஓட்டங்களை விளாசினார்.

குமார் சங்கக்காரவும் தனது பங்குக்கு 76 பந்துகளை எதிர்கொண்டு 13 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 105 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

333 ஓட்டங்களை இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், 47 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 240 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

 

தில்ஷானின் அதிரடியால் 332 ஓட்டங்களை குவித்தது இலங்கை


உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் 18ஆவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 50 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட்டை மாத்திரம் இழந்து 332 ஓட்டங்களை குவித்துள்ளது.
பங்களாதேஷூக்கு எதிராக மெல்போர்னில் தற்போது நடைபெற்றுவரும் போட்டியிலேயே இலங்கை அணி 332 ஓட்டங்களை குவித்துள்ளது.
நாணய சுழற்சியிவ்  வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
136 பந்துகளுக்கு முகங்கொடுத்து அதிரடியாக ஆடிய தில்ஷான், 22 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 161 ஓட்டங்களை விளாசினார்.
குமார் சங்கக்காரவும் தனது பங்குக்கு 76 பந்துகளை எதிர்கொண்டு 13 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 105 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
போட்டியில் வெற்றி பெற பங்களாதேஷ் அணி 333 ஓட்டங்களை பெறவேண்டும்

 

ஸ்கொட்லாந்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றி


உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் 17ஆவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்கொட்லாந்து அணியை தோற்கடித்துள்ளது. 

டுனேட்டில் இன்று வியாழக்கிழமை (26) ஆரம்பமான 17ஆவது போட்டியில் ஆப்கானிஸ்தான் – ஸ்கொட்லாந்து அணிகள் மோதின. 

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.   

இதனையடுத்து முதலில் களமிறங்கிய ஸ்கொட்லாந்து 50 ஒவரில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 210 ஓட்டங்களை பெற்றது.   

211 ஓட்டங்களை வெற்றி இலக்காக துரத்திய ஆப்கானிஸ்தான் அணி 49.3 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 211 ஓட்டங்களை பெற்று 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

 

நியூ அணித்தலைவரை கட்டுப்படுத்த தாங்கள் தயார்: அவுஸ்திரேலியா பந்து வீச்சாளர் ஜோஸ்


நியூசிலாந்து, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் நாளை(27) நடைபெறவுள்ள உலகக்கிண்ண குழு நிலைப் போட்டியில் நியூசிலாந்து அணித்தலைவரை கட்டுப்படுத்த தாங்கள் தயராக இருப்பதாக அவுஸ்திரேலியா அணியின் பந்துவீச்சாளர் ஜோஸ் கஸல்வூட் தெரிவித்துள்ளார். 
அவர் ஒரு  சிறந்த துடுப்பாட்ட வீரர். நல்ல போர்மில் உள்ளார். அவரை கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிடால்  ஓட்டங்களை அவர் குவிப்பார். எமது சிரேஸ்ட வீரர்கள் பலர் அவர் துடுப்பாடும் விதங்களை ஐ.பி.எல் போட்டிகளில் நேரடியாக பார்த்துள்ளனர். எமது அணிக்கூட்டங்களின் போது அவற்றை நாங்கள் கலந்துரையாடி தயார்ப்படுத்தல்களை செய்து வருகின்றோம். 24 வயதான ஜோஸ் கஸல்வூட் இன்றைய பயிற்சியின் பின்னர் இந்தக் கருத்துகளை கூறியுள்ளார். 
ஆரோன் பிஞ்ச், டேவிட் வோர்னர் போன்றவர்களுக்கு பந்து வீசி பயிற்சிகளை செய்துள்ளோம். மக்கலம் போன்று அடித்தாடும் இவர்களுக்கு பந்துவீசி பயிற்சிகளை மேற்கொள்ளவது நல்ல பயிற்சிகளை தமக்கு வழங்குவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். 
அவுஸ்திரேலியா அணியில் டேவிட் வோர்னர், ஆரோன் பிஞ்ச், கிளன் மக்ஸ்வெல் போன்ற அதிரடி வீரர்களும், நியூசிலாந்து அணியில் பிரன்டன் மக்கலம், மார்டின் கப்டில், கூரே அன்டர்சன் போன்ற வேகமாக அடித்தாடும் வீரர்களும் உள்ளனர். 
இதன் காரணமாக நாளைய போட்டியில் அதிக ஓட்டங்கள் குவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  அத்துடன் குழு A இல் இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணியே முதலிடத்தை பெறும் என்ற எதிர்பார்ப்புக்களும் உள்ளன.

 

அரபு எமிரேட்ஸை வீழ்த்தி அசத்திய அயர்லாந்து


11ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் 16ஆவது போட்டியில் அயர்லாந்து அணி, 2 விக்கெட்டுக்களால்  ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை தோற்கடித்துள்ளது. 

பிரிஸ்பேனில் இன்று புதன்கிழமை(25) ஆரம்பமான 16ஆவது போட்டியில் அயர்லாந்து – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. 

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.  

இதனையடுத்து, முதலில் களமிறங்கிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ், 50 ஒவரில், 9 விக்கெட்டுகளை இழந்து 278 ஓட்டங்களை பெற்றது.  

279 ஓட்டங்களை வெற்றி இலக்காக துரத்திய அயர்லாந்து அணி, 49.2 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 279 ஓட்டங்களை பெற்று இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

 

 

நியூசிலாந்தில் கிண்டல் செய்வார்கள் : ஆஸி வீரர் வோனர்

அவுஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான குழு நிலைப் போட்டி நியூசிலாந்து ஈடின் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் தமது அணி விளையாடும் போது ரசிகர்கள் தங்களுக்கு எதிராக கிண்டல், கேலி செய்வார்கள் என அவுஸ்திரேலிய  அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, இதே போன்ற சம்பவம் நடந்துள்ளதாகவும், குறிப்பாக தனக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட வாய்ப்புக்கள் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   தான் அவற்றை சுவாரசியமாக எதிர்பார்ப்பதாகவும், அவற்றுக்கு துடுப்பால் பதிலடி கொடுக்க தயராகவுள்ளதகவும் அவர் கூறியுள்ளார். 

பிரண்டன் மக்கலம் அணியை சிறப்பாக வழி நடத்தி வருவதாகவும், அவருடன் தான் அதிகமாக விளையாடவிட்டாலும் அவர் சிறப்பானவர் என்பது தனக்கு தெரியும் எனவும் டேவிட் வோர்னர் தெரிவித்துளார்.

இந்த இரு அணிகளுக்குமான போட்டி எதிர்வரும் 28ம் திகதி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் அவுஸ்திரேலிய  அணி வெற்றி பெற்றாலே குழு நிலையில் முதல் இடம் நோக்கி நகர வாய்ப்புக்கள் கிடைக்கும்.

நியூசிலாந்து அணி வெற்றி பெற்றால் அவர்கள் முதலிடத்தை தமதாக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.  

இலங்கை அணியில் இருந்து ஜீவன் விலகல்

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஜீவன் மென்டிஸ் உலகக்கிண்ண இலங்கை அணியில் இருந்து விலகியுள்ளார். பயிற்சியின் போது ஏற்பட்ட தசை பிடிப்பே அவர் விலக காரணமக அமைந்துள்ளது. சிறிய ஓய்வின் பின்னர் விளையாட முடியும் என ஆரம்பத்தில் நம்பிக்கை இருந்த போதும்இ ஸ்கான் பரிசோதனையின் பின்னர் அவரின் உபாதை குணமடைய 3 வாரங்கள் ஆகும் என உறுதி செய்யப்பட்டுள்ளது, எனவே  இந்த தொடரில் விளையாட முடியாது அவார் விலகியுள்ளதுடன் நாடு திரும்பவுள்ளார். இந்த நிலையயில் கடந்த இரண்டு உலகக் கிண்ண தொடர்களிலும் இலங்கை அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய உப்புல்   தரங்க அணியில் இணைக்கப்பட்டுள்ளார். இன்று (25 ) சற்று முன்னர் உப்புல் தரங்கவை அணியில் இணைப்பதற்கு சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் கிரிக்கெட் குழு அனுமதி வழங்கியுள்ளது. 

கெயிலின் அதிரடியில் நொறுங்கிய சிம்பாப்வே

11ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் 15ஆவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி, 73 ஓட்டங்களால் சிம்பாப்வே அணியை தோற்கடித்துள்ளது. 

கான்பராவில் இன்று செவ்வாய்க்கிழமை(24) ஆரம்பமான 15ஆவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் – சிம்பாப்வே அணிகள் மோதின. 

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.  
இதனையடுத்து, முதலில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 50 ஒவரில், 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 372 ஓட்டங்களை குவித்தது.  

டக்வொர்த் லீவிஸ் முறைப்படி, 48 ஓவர்களில் 363 ஓட்டங்களை வெற்றி இலக்காக துரத்திய சிம்பாப்வே அணி, 44.3 ஓவர்களில் 289 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியை தழுவியது.